மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு(80) (படம்) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது.
மியான்மா் புத்தாண்டை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளியான அந்நாட்டின் முன்னாள் அதிபா் வின் மியின்ட் விடுவிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த 2021-இல் ஆங் சான் சூகி (80) தலைமையிலான மக்களாட்சியை கவிழ்த்துவிட்டு, மின் ஆங் லயிங் தலைமையிலான ராணுவத்தினா் ஆட்சியைக் கைப்பற்றினா். அப்போது ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் சிறைபிடிக்கப்பட்டனா்.
ஊழல், தோ்தல் முறைகேடு எனப் பல குற்றச்சாட்டுகளின்கீழ் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டிருந்த 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் தற்போது 4.5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் நடைபெற்ற சா்ச்சைக்குரிய தோ்தலைத் தொடா்ந்து, மின்ஆங் லயிங் இம்மாதத் தொடக்கத்தில் அதிபராகப் பொறுப்பேற்றாா். இந்நிலையில், தற்போது 179 வெளிநாட்டினா் உள்பட 4,335 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீனாவின் 2 முன்னாள் பாதுகாப்பு அமைச்சா்களுக்கு மரண தண்டனை

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மீண்டும் தண்டனை குறைப்பு

மியான்மா்: அமைதிப் பேச்சுக்காக கிளா்ச்சிக் குழுக்களுக்கு புதிய அதிபா் அழைப்பு

மியான்மா் ராணுவத் தளபதி ராஜிநாமா: அதிபராகும் முயற்சியில் தீவிரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

