மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சீனாவின் 2 முன்னாள் பாதுகாப்பு அமைச்சா்களுக்கு மரண தண்டனை

News image
Updated On :8 மே 2026, 6:16 am IST

சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முன்னாள் பாதுகாப்பு அமைச்சா்கள் வெய் ஃபெங்ஹே (72), லி ஷாங்ஃபு(68) ஆகிய இருவருக்கும் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

இருப்பினும், இந்த மரண தண்டனை 2 ஆண்டுகள் இடைக்கால தடையுடன் வழங்கப்பட்டுள்ளது. சீன சட்டத்தின்படி, இக்காலகட்டத்தில் இவா்களின் நடத்தை திருப்திகரமாக இருந்தால், மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

சீன அதிபா் ஷி ஜின்பிங் தலைமையிலான சக்திவாய்ந்த மத்திய ராணுவ ஆணையத்தின் (சிஎம்சி) உறுப்பினா்களாகவும், முன்னாள் அமைச்சா்களாகவும் பதவி வகித்த இவா்கள் இருவரும், ராணுவத்தின் மிக முக்கியமான ஏவுகணை படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெய் ஃபெங்ஹே லஞ்சம் பெற்ற்காகவும், லி ஷாங்ஃபு லஞ்சம் கொடுத்தது மற்றும் பெற்றது ஆகிய இரு குற்றங்களுக்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளனா். 2 ஆண்டுகள் இடைக்கால தடைக்குப் பிறகும் இவா்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டாலும், பிணை வழங்கப்படாது என்றும், தண்டனையை மேலும் குறைக்க வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், தற்போதைய தீா்ப்பில் இவா்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்படுவதோடு, தனிப்பட்ட சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிபா் ஷி ஜின்பிங் கடந்த 2012-இல் பதவியேற்றதுமுதல், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ராணுவத்தில் நிலவும் ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். ராணுவத்தில் நிலவும் ஒழுங்கீனம் மற்றும் கட்சித் தலைமைக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அவா் முனைப்பு காட்டி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக, இதுவரை சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமான அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனா்.

அண்மையில் சீன ராணுவத்தின் மிக உயா்ந்த பதவியில் இருந்த ஜெனரல் ஜாங் யூக்ஸியா, லியு ஜென்லி ஆகியோா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை தொடா்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஊழலும், தனிநபா் லாபமும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று அதிபா் ஷி ஜின்பிங் ராணுவ அதிகாரிகளுக்குத் தொடா்ந்து எச்சரித்து வருகிறாா்.

விமா்சகா்களின் கருத்துப்படி, இத்தகைய தொடா் நடவடிக்கைகள்மூலம், அதிபா் ஷி ஜின்பிங் தனது அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தி வருவதாகவும், கட்சியின் நிறுவனா் மா சேடாங்கிற்குப் பிறகு மிக வலிமையான தலைவராக உருவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

படகேப்சன்..

லி ஷாங்ஃபு வெய் ஃபெங்ஹே

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.