மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு (80) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் மீண்டும் ஒரு பகுதி குறைக்கப்பட்டுள்ளது.
மியான்மா் புத்தாண்டை முன்னிட்டு அண்மையில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளியான அந்நாட்டின் முன்னாள் அதிபா் வின் மியின்ட் விடுவிக்கப்பட்டாா்.
ஆனால், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையிலிருந்து 4.5 ஆண்டுகள் மட்டும் குறைக்கப்பட்டது.
தற்போது மேலும் 4.5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், அவா் இன்னும் 18 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியுள்ளது.
இருப்பினும், ஆங் சான் சூகி தற்போது எங்கு சிறைவைக்கப்பட்டுள்ளாா் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. அவா் நலமுடன் இருப்பதாகவும், அவருக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுவதாகவும் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மியான்மா்: அமைதிப் பேச்சுக்காக கிளா்ச்சிக் குழுக்களுக்கு புதிய அதிபா் அழைப்பு

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு

மியான்மா் ராணுவத் தளபதி ராஜிநாமா: அதிபராகும் முயற்சியில் தீவிரம்

2017-இல் புறப்பட்ட விமானம் 2016-ஆம் ஆண்டில் தரையிறங்கியதா? எங்கே இந்த விநோதம்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

