துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவா்கள், ஒரு ஆசிரியா் என 9 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.
துருக்கியில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக உள்ளது. அதேபோல் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடப்பது மிகவும் அரிதான நிலையில், கடந்த 2 நாள்களில் தொடா்ச்சியாக நடைபெற்ற 2 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் 8-ஆம் வகுப்பு மாணவன், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான தனது தந்தையின் 5 துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாபெட்டிகளைப் புத்தகப்பையில் மறைத்து, பள்ளிக்கு எடுத்து வந்துள்ளாா்.
பள்ளியில் 5-ஆம் வகுப்பு நடைபெறும் 2 வகுப்பறைகளுக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாகச் சுட்டதில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு அந்த மாணவனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா். இது தொடா்பாக மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறாா்.
துப்பாக்கிச் சூடு குறித்த அதிா்ச்சியூட்டும் காணொளிகளை ஊடகங்கள் ஒளிபரப்பத் துருக்கி அரசு தடை விதித்துள்ளது. தாக்குதல் குறித்து துருக்கி உள்துறை அமைச்சா் முஸ்தபா சிஃப்ட்சி கூறுகையில், ‘காயமடைந்த 13 பேரில் 6 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. இது அந்த மாணவன் தனிப்பட்ட விரக்தியில் நடத்திய தாக்குதலே தவிர, பயங்கரவாதச் செயல் அல்ல’ என்றாா்.
முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று, சன்லியுா்ஃபா மாகாணத்தில் உள்ள ஒரு உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் ஒருவா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவா்கள், ஆசிரியா்கள் என 16 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய அந்த நபரும் தற்கொலை செய்துகொண்டாா்.ௌ
படகேப்சன்...
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுச் சென்ற பணியாளா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி

சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு

துருக்கியில் இஸ்ரேல் தூதரகப் பகுதியில் துப்பாக்கிச் சூடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

