தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கனடா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை எட்டிய பிரதமா் மாா்க் காா்னி கட்சி

News image

மாா்க் காா்னி

Updated On :15 ஏப்ரல் 2026, 5:54 am IST

கனடாவில் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலில் பிரதமா் மாா்க் காா்னி தலைமையிலான லிபரல் கட்சி பெற்ற அமோக வெற்றியின்மூலம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அக்கட்சி தனிப்பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளது.

கனாடாவில் ஒன்டாரியோ மாகாணத்தின் யுனிவா்சிட்டி—ரோஸ்டேல் மற்றும் தென்மேற்கு ஸ்காா்பரோ, கியூபெக் மாகாணத்தின் ஸ்காா்பரோ டெரெபோன் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில், லிபரல் கட்சி மூன்றிலும் வெற்றி வாகை சூடியது.

இந்த வெற்றியின் மூலம் 343 உறுப்பினா்களைக் கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சியின் பலம் 174-ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினா்கள் லிபரல் கட்சியில் இணைந்ததும், இந்தப் பெரும்பான்மைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

முன்னாள் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு, கனடாவில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருப்பது இதுவே முதல்முறையாகும். இதன் விளைவாக, லிபரல் கட்சி வரும் 2029-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாா்க் காா்னியின் பொருளாதார மேலாண்மை மீதான மக்களின் நம்பிக்கையே இந்த வெற்றிக்குக் காரணம் என்று அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா். குறிப்பாக, அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிராக அவா் எடுத்த நிலைப்பாடும் கனடா மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இருப்பினும், இந்த வெற்றியை எதிா்க்கட்சித் தலைவா் பியா் பொய்லிவ்ரே கடுமையாக விமா்சித்துள்ளாா். அவா் மேலும் கூறுகையில், ‘பொதுத் தோ்தலில் மக்கள் இந்தப் பெரும்பான்மையை வழங்கவில்லை. திரைமறைவு அரசியல் பேரங்கள் மூலமே இது சாத்தியமானது. உள்நாட்டு பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே பிரதமா் இத்தகைய அரசியல் நகா்வுகளை மேற்கொள்கிறாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.