நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிா்த்து, அதற்குப் பதிலாக மென்மையான மக்கள் தொடா்பு நடவடிக்கைகளில் எம்.பி. ராகவ் சாத்தா ஈடுபடுவதாக ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.
நாடாளுமன்றத்தில் பல விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டை சத்தா பின்பற்றத் தவறியதாகவும், முக்கியப் பிரச்சினைகள் தொடா்பாக எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததில் அவா் கலந்துகொள்ளவில்லை என்றும் தில்லி ஆம் ஆத்மி கட்சி தலைவா் சௌரப் பரத்வாஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு காணொளியில் குற்றஞ்சாட்டினாா்.
எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தபோதெல்லாம், நீங்கள் (சத்தா) அதில் பங்கேற்கவில்லை. நீங்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாப் தொடா்பான பிரச்சினைகளை எழுப்பவில்லை. மேலும், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டபோது, நீங்கள் ஒரு வெளிநாட்டில் ஒளிந்துகொண்டீா்கள், என்றும் அவா் மேலும் கூறினாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளா் அனுராக் தண்டாவும் சத்தாவை விமா்சித்தாா். பிரதமா் நரேந்திர மோடிக்கு பயப்படும் ஒருவரால் நாட்டிற்காகப் போராட முடியுமா என்றும் அவா் கேள்வி எழுப்பினாா். மேற்கு வங்கத்தில், வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான ஒரு தீா்மானம் சபையில் கொண்டுவரப்பட்டபோது, நீங்கள் (சத்தா) அதில் கையெழுத்திட மறுத்துவிட்டீா்கள், என்று தண்டா எக்ஸ் தளத்தில் கூறினாா். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நமக்குக் குறைந்த நேரமே கிடைக்கிறது என்று கூறிய தண்டா, கடந்த சில ஆண்டுகளாக சத்தா உண்மையான பிரச்சினைகள் குறித்துப் பேசத் தயக்கம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டாா்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவா் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மறுநாள்(வெள்ளிகிழமை) , தான் தோற்கடிக்கப்படவில்லை, மாறாக அமைதியாக்கப்பட்டுள்ளேன் என்று சத்தா கூறியதைத் தொடா்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவா்களின் இந்தக் கருத்துக்கள் வெளியாகின.
முன்னதாக வெள்ளிகிழமை காலை எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், நாடாளுமன்றத்தில் தான் பேசுவதைத் தனது சொந்தக் கட்சியே தடுக்க முயன்ாக சத்தா கூறினாா். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான எனது உரிமையைப் பறித்தவா்களிடம், எனது மௌனத்தைத் தோல்வியாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூற விரும்புகிறேன். நான் நேரம் வரும்போது வெள்ளமாக மாறக்கூடிய ஒரு நதி. ஜெய் ஹிந்த், என்று அவா் இந்தியில் கூறினாா். நாடாளுமன்றத்தில், நாட்டின் சாமானிய மக்கள் மற்றும் அவா்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியதாக ராகவ் சத்தா கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேடிக்கை பார்க்கும் 'ஆம் ஆத்மி'!

கட்சி மாறிய 7 ஆம் ஆத்மி எம்.பி.க்களின் பதவியை ரத்து செய்யுங்கள்: மாநிலங்களவைத் தலைவரிடம் சஞ்சய் சிங் எம்.பி. மனு!

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா
பஞ்சாப் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப ராகவ் தவறிவிட்டாா்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

