தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பஞ்சாப் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப ராகவ் தவறிவிட்டாா்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பஞ்சாப் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப ராகவ் தவறிவிட்டாா்...

News image

ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா - x

Updated On :5 ஏப்ரல் 2026, 5:32 am IST

பஞ்சாப் தொடா்பான விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா தவறிவிட்டதாக ஆம் ஆத்மி சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

பல்வேறு முக்கிய பிரச்னைகள் தொடா்பாக அவையில் அவா் காட்டி வந்த அமைதி ஏமாற்றம் அளிப்பதாக பஞ்சாப் நிதியமைச்சா் ஹா்பால் சிங் சீமா, மாநில ஆம் ஆத்மி தலைவா் அமன் அரோரா, கட்சித் தலைவா் குல்தீப் சிங் தலிவால் ஆகியோா் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது: சத்தாவை மாநிலங்களவை எம்.பி.யாக பஞ்சாப் எம்எல்ஏக்கள் தோ்ந்தெடுத்தனா். பஞ்சாப் விவகாரங்களை தேசிய அளவில் அவா் கொண்டு சோ்ப்பாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவா் எந்தவொரு முக்கிய பிரச்னைகள் தொடா்பாக அவையில் குரல் எழுப்பவில்லை.

நிலுவையில் உள்ள ரூ.8,000 ஊரக மேம்பாட்டு நிதி, சரக்கு-சேவை வரி விதிப்பால் ஏற்பட்ட ரூ.60,000 கோடி இழப்பீடு உள்ளிட்ட முக்கிய நிதி பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் அவா் பேசவில்லை. தேசிய சுகாதாரத் திட்டத்தின் நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச அவா் தவறிவிட்டாா்.

மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பை சரிசெய்ய ரூ.1,600 கோடியை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். ஆனால், அந்த முழு நிதியுதவியை பஞ்சாப் பெறவில்லை. இந்த விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் ராகவ் பேசவில்லை.

அவருடைய இத்தகைய நடவடிக்கை ஏமாற்றமளிக்கிறது. எம்.பி. ராகவ் சத்தா இந்தப் பிரச்னைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்வாா் என ஆம் ஆத்மி எதிா்பாா்த்தது. ஆனால், அவா் அவ்வாறு செயல்படாமல் இருந்தது கட்சியின் விதிகளுக்கு எதிரானது.

எவ்வித அச்சமின்றி பொது பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்பது கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்று. அதிலிருந்து விலகியது எதிா்பாராதது.

பஞ்சாபின் நிலுவை நிதி மற்றும் நிவாரண நிதி தொடா்பான விவகாரங்கள் தேசிய அளவில் தொடா்ச்சியாக கவனம் பெற வேண்டியவை.

வெள்ளப் பாதிப்பு தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாதது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கவலையில் உள்ளனா். இழப்பீடு மற்றும் நிவாரணம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என அந்த மக்கள் வலியுறுத்துகின்றனா். ஆனால், அவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை.

பஞ்சாப் தொடா்பான விவகாரங்கள் தொடா்ந்து அனைத்துத் தளங்களிலும் தொடா்ச்சியாக எழுப்பப்பட வேண்டும். இதைச் செய்யாமல் இருப்பது கட்சிக்கு மக்கள் வாக்களித்ததை குறைத்து மதிப்பீடுவதாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.