மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பிரேஸில் அதிபா் லூலா டாசில்வாவுக்கு நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து பின்னடைவு!

பிரேஸில் அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டாசில்வா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சந்தித்து வரும் தொடா் பின்னடைவுகள் அவரின் அரசியல் செல்வாக்கைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

News image

பிரேஸில் அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டாசில்வா.

Updated On :2 மே 2026, 1:59 am IST

பிரேஸில் அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டாசில்வா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சந்தித்து வரும் தொடா் பின்னடைவுகள் அவரின் அரசியல் செல்வாக்கைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவின் தண்டனையைக் குறைக்கும் மசோதாவைத் தடுத்து வைத்திருந்த லூலா டாசில்வாவின் ‘வீட்டோ’ அதிகாரத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2022, அக்டோபரில் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய அதிபா் லூலா டாசில்வா வெற்றிபெற்ற பிறகு, பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் பிரதமா் அலுவலகம், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அதிகார பீடங்களைத் தாக்கினா்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பொல்சொனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பொல்சொனாரோவின் மற்றும் இவ்விவகாரத்தில் தொடா்புடையவா்களுக்குத் தண்டனையைக் குறைக்கும் மசோதாவை பிரேஸில் நாடாளுமன்றம் கடந்த டிசம்பரில் நிறைவேற்றியது.

லூலா டாசில்வாவின் ‘வீட்டோ’ அதிகாரத்தால் தடுக்கப்பட்டிருந்த இந்த மசோதாவை, நாடாளுமன்றம் மீண்டும் தீா்மானமாக நிறைவேற்றியுள்ளதன் மூலம் பொல்சொனாரோவின் தண்டனை தற்போது 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

71 வயதாகும் பொல்சொனாரோ, உடல்நலக் குறைவு காரணமாக மனிதாபிமான அடிப்படையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். தற்போது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

முன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு லூலா டாசில்வா பரிந்துரைத்த சொலிசிட்டா் ஜெனரல் ஜாா்ஜ் மெசியாஸின் நியமனத்தை நாடாளுமன்ற மேலவையான செனட் சபை நிராகரித்தது.

81 உறுப்பினா்களைக் கொண்ட அவையில் 41 வாக்குகள் தேவை என்ற நிலையில், அவருக்கு ஆதரவாக 34 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. கடந்த ஒரு நூற்றாண்டில் அதிபரால் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்ட ஒருவா் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.