மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆஸி.யின் முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்! 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!

ஆஸ்திரேலியாவின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக பெண் ராணுவத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

சூசன் கோய்ல் - X

Updated On :14 ஏப்ரல் 2026, 9:45 am IST

ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல்முறையாக பெண் ராணுவத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புப் படையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இந்த உத்தரவை வெளியிட்டார்.

ராணுவ கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைவராக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (55) இந்தாண்டு ஜூலை முதல் ராணுவத் தளபதியாக பதவியேற்கவுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிமோன் ஸ்டூவர்ட்-க்கு மாற்றாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ராணுவத்தில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் ராணுவத் தளபதியாக சூசன் கோய்ல் நியமிக்கப்பட்ட உத்தரவு வெளியாகியுள்ளது.

”இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். சூசன் என்னிடம் சொன்னது போல், நீங்கள் காணமுடியாத ஒன்றாக உங்களால் உருவாக முடியாது. இன்று ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் படையில் பணியாற்றும் பெண்களுக்கும், எதிர்காலத்தில் பணியாற்ற விரும்பும் பெண்களுக்கும் சூசனின் சாதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என ஆஸி. பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லேஸ் தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வரும் கோய்ல் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். ஆஸி. ராணுவத்தில் எந்தவொரு பிரிவிற்கும் தலைமை தாங்கும் முதல் பெண் இவரே ஆவார்.

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் தற்போது பெண்களின் பங்கு 21% இருப்பதாகவும், தலைமைப் பொறுப்புகளில் 18.5% பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் பெண்களின் மொத்த ராணுவ பங்களிப்பை 25% ஆக உயர்த்த ஆஸி. பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பெண் ராணுவ அதிகாரிகள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் பாலின பாகுபாடுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தவறியதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை மீது கடந்தாண்டு அக்டோபரில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராணுவத் தளபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.

Summary

Australia's First Female army chief! First time in 125 Years of History!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.