ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடங்கிவிட்டதாக லண்டனைச் சேர்ந்த கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் இன்று (ஏப். 13) மாலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளதாவது:
''ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் அரபிக்கடல் வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே அமைந்துள்ள இடங்கள் பாதிக்கப்படும் வகையில், கடல்சார் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஈரானியத் துறைமுகங்கள், எண்ணெய் முனையங்கள் அல்லது கடலோர வசதிகளுடன் தொடர்புடைய, எந்தவொரு நாட்டுக் கொடியையும் தாங்கிய கப்பல்களுக்கு, இந்த கட்டுப்பாடுகள் எவ்விதப் பாகுபாடுமின்றி பொருந்தும்.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை வழியாக, ஈரானைச் சாராத இடங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் இடைவழிப் பயணங்கள் ஏதும், இந்த நடவடிக்கைகளால் தடைபடுவதாகத் தகவல்கள் ஏதும் இல்லை'' எனவும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் - அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், அணு ஆயுத சோதனையை கைவிடவும், ஹோர்முஸ் நீரிணையில் விதித்துள்ள கட்டுப்பாடுகளை விலக்கவும் கோரி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்.8 ஆம் தேதி அறிவித்தார்.
இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்க குழுக்களை பாகிஸ்தான் வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, சனிக்கிழமை (ஏப்.11) பேச்சுவார்த்தை தாமதமாகத் தொடங்கியது.
சுமார் 21 மணிநேரம் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார். மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ள அமெரிக்காவை நம்பவில்லை என ஈரான் குறிப்பிட்டிருந்தது.
இதனால், ஈரான் எல்லையில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடப்போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை டிரம்ப் கையில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
US naval blockade against Iran begins; UKMTO confirms enforcement at Iranian ports
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு

பிடிவாதம் தளர வேண்டும்!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!

அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


