கீவ் : உக்ரைனில் ரஷியா நடத்திய வான் வழி தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட மூவர் கொல்லப்பட்டனர்.
ஒடேசா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகமொன்றை ரஷியாவின் ட்ரோன் ஒன்று இரவில் தாக்கியதில் அப்பகுதியில் இரண்டு பெண்களும் 2 வயது குழந்தையும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை(ஏப். 6) தெரிவித்தனர்.
அதில், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் கர்ப்பிணியொருவரும் இரு குழந்தைகளும் படுகாயமடைந்து சிகிச்சை பெறுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ரஷியாவுக்கு பதிலடியாக தங்களிடமுள்ள நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி கருங்கடல் பகுதிகளில் உள்ள ரஷியாவின் எண்ணெய் ஏற்றுமதி துறைமுகங்களைக் குறிவத்து தாக்குதல்களை உக்ரைன் நடத்தியது.
உக்ரைனில் கடந்த 4 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் ரஷிய ராணுவ நடவடிக்கைகளால் உக்ரைன் எங்கிலும் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 15,000-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
Summary
A Russian drone attack on Ukraine's southern port city of Odesa killed two women and a toddler, authorities said on Monday, while Ukrainian long-range drones targeted Russia's key Black Sea port for oil exports.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்!

அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
