ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே இன்று காலை அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

News image

ஈரான் ஷாஹித் பெஹெஸ்தி பல்கலை மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் சேதமடைந்த கட்டிடம் - AP

Updated On :4 ஏப்ரல் 2026, 4:37 pm IST

ஈரான் அணு மின் நிலையம் அருகே இன்று காலை அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானில் உள்ள புஷேர் அணு மின் நிலையத்தின் அருகே இன்று காலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அங்குள்ள கட்டிடம் சேதமாகி காவலாளில் ஒருவர் பலியானதாக ஈரான் அணுசக்தி மையம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும், முக்கிய கட்டிடங்களுக்கு பாதிப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த போர்ச்சூழலில் அணு மின் நிலையத்தைக் குறிவைத்து இதுவரை 4 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

புஷேர் அணுமின் நிலையம் ரஷியாவிடம் இருந்து பெறும் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தி ஈரானுக்குத் தேவையான 1,000 மெகாவாட் மின்சாரத்தை வழங்குகிறது. இதில், ரஷிய தொழில்நுட்ப வல்லுநர்களும் பணியாற்றுகின்றனர். இது ஈரானின் மின் தேவையில் 1% முதல் 2% வரை பங்களிக்கிறது.

ஈரான் இந்த அணு மின் நிலையத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுத்து வந்தது. இங்கு, கூடுதலாக 2,000 மெகாவாட் தயாரிக்க மேலும் இரு அணு உலைகளை நிறுவ கடந்த 2019-ல் ஈராப் முடிவெடுத்திருந்தது.

இதுமட்டுமின்றி, ஈரான் தென்மேற்கில் உள்ள பெட்ரோகெமிக்கல் மையத்தின் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பலியானவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், இதில் சேதத்தின் அளவு இன்னும் கணக்கெடுக்கப்படவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Summary

Iran says US-Israeli strikes near Bushehr nuclear plant kill one

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.