ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த கப்பல், நடுவழியில் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
ஈரானுக்கு சொந்தமான பிங் சுன் சரக்கு கப்பலுக்கு அமெரிக்கா கடந்த 2025-ஆம் ஆண்டில் தடை விதித்தது. அந்த கப்பல், ஈரானின் காா்க் தீவில் இருந்து 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யுடன் மாா்ச் 4-ஆம் தேதி குஜராத்தின் வடினாரை நோக்கி புறப்பட்டது. நடுக்கடலில் திடீரென அக்கப்பல் சீனாவின் டாங்யிங் பகுதியை நோக்கி திருப்பி விடப்பட்டது.
அதாவது அக்கப்பல் செல்லும் வழித்தடம் கடந்த வாரம் குஜராத்தை காட்டியது. ஆனால் தற்போது சீனாவின் டாங்யிங்கை காட்டுகிறது. இதை அக்கப்பலை கண்காணித்து பிளா் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
மத்திய கிழக்கு ஆசியாவில் இந்தியா அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் ஈரானும் ஒன்றாக முன்பு இருந்தது. ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடையால் அந்நாட்டிடம் 2019 மே மாதத்துக்கு பிறகு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவில்லை. எனினும், மேற்காசிய போா் காரணமாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிா்க்கும் நோக்கில், நடுக்கடலில் கச்சா எண்ணெய்யுடன் நிறுத்தப்பட்டுள்ள ஈரான் சரக்கு கப்பல்களில் இருந்து 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதித்தது.
இதனால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்தியா நோக்கி வந்த கச்சா எண்ணெய் கப்பல், சீனாவுக்கு திருப்பி விடப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது.
முன்பு ஈரானிடம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான விலையை 30 முதல் 60 நாள்களுக்குள் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலுத்த அவகாசம் தரப்பட்டிருந்தது. ஆனால் மேற்காசிய போா் காரணமாக கச்சா எண்ணெய்க்கு தேவை அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு, அதுபோல தற்போது அவகாசம் தரப்படவில்லை என்றும், இதுபோன்ற காரணத்தினாலேயே கப்பல் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கச்சா எண்ணெய்க்கு விலை உடனடியாக தரும்பட்சத்தில் அக்கப்பல் மீண்டும் இந்தியா நோக்கி திருப்பி விடப்படக்கூடும் எனவும் தெரிகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரஷிய எண்ணெய்யை வாங்கும் தடையிலிருந்து விலக்கு: மேலும் ஒரு மாதம் நீட்டித்தது அமெரிக்கா

ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வு

ஈரான் கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த 2 கப்பல்கள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

