மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா

ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 1:29 am IST

ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் புதன்கிழமை தெரிவித்தாா்.

ஈரானுடனான போா் காரணமாக மேற்காசியாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது. இதைக் கருத்தில் கொண்டு, உக்ரைன் மீது போா் தொடுத்த ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க விதிக்கப்பட்ட தடையை தளா்த்திய அமெரிக்கா, ரஷியாவிடம் 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தற்காலிக அனுமதி அளித்தது. இந்தத் தடையில் இருந்து மேலும் சில நாடுகளுக்கும் அமெரிக்கா விலக்களித்திருந்த நிலையில், அது ஏப்.11-ஆம் தேதியுடன் காலாவதியானது.

இந்நிலையில் அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் பேசிய ஸ்காட் பெசன்ட், ‘ரஷியா மற்றும் ஈரான் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை அமெரிக்கா நீட்டிக்காது’ என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.