மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்

அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல் நடத்தியது பற்றி..

News image

இஸ்ரேல் - ஈரான் ஏவுகணைத் தாக்குதல் - AP

Updated On :1 ஏப்ரல் 2026, 10:08 am IST

டெஹ்ரான்: அமெரிக்க நிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் கடற்படை, அமெரிக்க, இஸ்ரேலிய இலக்குகள் மீது கடும் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

கடற்படையின் 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4'-இன் 88-வது தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று அதிகாலையில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக நான்கு தாக்குதல்களை நடத்தியதாக பிரஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

எதிரிகளின் இலக்குகளை குறி வைத்து, தங்கள் நாட்டு கடற்படை கடுமையான தாக்குதலை நடத்தியிருப்பதாக ஈரான் தெரிவித்திருப்பதாக பிரஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

வளைகுடாவின் நடுக்கடலில், 'எக்ஸ்பிரஸ் ஹல்ஃபாங்' என்ற இஸ்ரேலின் கொள்கலன் கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தாக்குதல் நடவடிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையோரத்தில் உள்ள அமெரிக்க கடற்படையினரின் மறைவிடம் ஒன்று, வெடிகுண்டு வீசும் ட்ரோன்கள் மூலம் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைனில் உள்ள மனாமா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தனது தளத்திற்கு வெளியே நிலைநிறுத்தப்பட்டிருந்த, அமெரிக்காவின் கடற்படைக்குச் சொந்தமான ஆளில்லா வான்வழி டிரோன் தாக்குதல் எதிர்ப்பு அமைப்பு ஒன்றையும் ஈரான் அழித்ததாக பிரஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

குவைத்தில் "ஜாபர் அல்-அஹ்மத்" என்ற பகுதியில் உள்ள அமெரிக்க தளத்தில் இருந்த இரண்டு மேம்பட்ட முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் ரேடார்களும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.

Summary

Iran's heavy attacks on US and Israeli targets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.