பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக திட்டமிட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள முக்கிய பாலங்கள், அணுமின் நிலையம், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், வர்த்தக முனையம் மற்றும் சிமெண்ட் ஆலை போன்ற முக்கிய இடங்களைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. ஈரானின் அரசு ஊடகங்களில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல், அமெரிக்க படைகள் இணைந்து ஈரான் மீது பிப்ரவரி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரானின் தலைமை மதகுருவாக இருந்த அயதுல்லா கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவின் எஃப் 15இ ரக போர் விமானத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தின.
சர்வதேச வணிகத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும், போர் நிறுத்தத்திற்கு முன்வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார். இந்தக் கெடு முடிய 48 மணிநேரம் உள்ள நிலையில், ஈரான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையென்றால், நகரத்தை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இன்று வெளியிட்டிருந்த பதிவில், செவ்வாய்க்கிழமையன்று ஈரானின் முக்கியப் பகுதிகளான உள்ள அணுமின் நிலையம், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், வர்த்தக முனையம், சிமெண்ட் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரம் உள்ளிட்ட பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் அறிவிப்பை வெளியிட்டு வருவதால், உலகளாவிய பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
Summary
Iran's IRGC says it targeted fuel and petrochemical sites in Persian Gulf
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் போர் மீண்டும் வெடிக்கிறதா? ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல்!

போர்நிறுத்தம்! அமீரகம், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தொடரும் தாக்குதல்!
குவைத் அரசு அலுவலகங்கள் மீது ஈரான் தாக்குதல்!

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

