மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒரு தலைவன்தான்...

ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் விடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டு வந்த நிலையில், இரண்டாவது சிங்கிளான 'ஒன் சன் ஒன் மூன்' பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.

Published On :4 அக்டோபர் 2026, 4:10 am IST

ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் விடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டு வந்த நிலையில், இரண்டாவது சிங்கிளான 'ஒன் சன் ஒன் மூன்' பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்துப் பாடி இருக்கும் இந்தப் பாடலை அவருடன் இணைந்து எம்.எஸ்.கிருஷ்ணாவும் பாடியுள்ளார். பாடலை ஹைசன்பெர்க், சூப்பர் சுபு எழுதியுள்ளனர்.

மேற்கத்திய இசை, இந்திய இசையைக் கலந்து அனிருத் கொடுத்திருக்கும் இந்தப் பாடல் மெல்லிசையாக மனதை வருடுகிறது. உறுத்தாத இசையில் ஒலிக்கும் 'இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன் தான்' என்ற வரிகள் ரஜினியின் 'பாட்ஷா' படப் பாடல் ஒன்றை நினைவூட்டுகிறது. அதேவேளையில் ரஜினிகாந்த் திரை ஆளுமைக்கு கட்டியம் கூறும் இப்பாடலில் 'ஜெயிலர் 2' ரஜினியின் சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் 'ஜெயிலர் 2'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கௌரவ வேடத்தில் நடிக்கின்றனர்.

அக்டோபர் 15-இல் திரைக்கு வர இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.