லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

'அப்பா பைக்'

தாய்க்கு நிகராகக் கொண்டாடப்பட வேண்டிவர் தந்தையும்தான்.

Published On :15 மார்ச் 2026, 4:35 pm IST

தாய்க்கு நிகராகக் கொண்டாடப்பட வேண்டிவர் தந்தையும்தான். குடும்பத்தின் சுமைதாங்கியாக இருந்து, வாழ்நாளை குழந்தைகளுக்காகக் கழித்து, மண்ணைவிட்டு பிரிந்த தந்தை என்ற மாமனிதரைப் பலரும் நினைப்பதில்லை. ஆனால், அறுபத்து எட்டு வயதானபோதும், தன்னை வாழ வைக்க உழைத்த தந்தையை மறக்காமல் அவர் பயன்படுத்தி வந்த சிறிய ரக இரு சக்கர வாகனத்தை 'அப்பா பைக்' எனப் பெயரிட்டு பயன்படுத்தி வருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் ஆறுமுகம்.

அவர் கூறியதாவது:

'என்னுடைய சொந்த ஊர் திருச்செங்கோடு. தற்போது நாமக்கல்லில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வசித்து வருகிறேன்.

எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனது தந்தை சென்னியப்பன் ஜவுளித் தொழில் செய்தார். 50 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய இளம் வயதில் ஜவுளித் தொழில் செய்து வந்த தந்தை, துணிகளை மூட்டையாகக் கட்டி இந்த பைக்கில் வைத்துதான் ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வார். அவர் இருபது ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார்.

Story image

அப்போது பெட்ரோலில் ஓடிய வாகனம் இப்போது பேட்டரியில் இயங்கி வருகிறது. எனக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். வீட்டில் கார், 4 இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இருந்தபோதும் தந்தையின் நினைவாக இந்த வாகனத்தையே பயன்படுத்தி வருகிறேன்.

எந்த நிகழ்வுக்குச் சென்றாலும் தந்தை பயன்படுத்திய வாகனத்தில் சென்று வருவதையே மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்.

அதைப் பார்த்ததும் 'சென்னியப்பன் மகன் ஆறுமுகம் வந்துவிட்டார்' என்பதை மற்றவர்கள் பார்த்து தெரிந்துகொள்வர். அவரது நினைவாகவே 'அப்பா பைக்' என எழுதி உள்ளேன். சிலர் கேலியாகப் பார்ப்பதும், பேசுவதும் உண்டு. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அந்த வாகனத்தை தினசரி சுத்தம் செய்து விடுவேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் என் தந்தை என்னை விட்டு எங்கும் செல்லவில்லை என்கிற நிம்மதி கிடைக்கும்' என்கிறார் ஆறுமுகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.