தவெகவுடன் இணைந்ததால், கவுன்சிலர் பதவியைத் தவிர கட்சியின் அனைத்துப் பதவிகளையும் காங்கிரஸ் கவுன்சிலர் ராஜிநாமா செய்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக திமுக கூட்டணியிலிருந்து விலகி, தவெகவுடன் காங்கிரஸ் இணைந்தது. இந்த நிலையில், தவெகவுடன் காங்கிரஸ் இணைந்ததால், கவுன்சிலர் பதவியைத் தவிர்த்து அனைத்துப் பதவிகளையும் ராஜிநாமா செய்வதாக தூத்துக்குடி கார்ப்பரேஷன் கவுன்சிலர் சந்திரபோஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த ராஜிநாமா கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, "நான் கடந்த 1988 முதல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்தேன். நான் தூத்துக்குடியில் 1996 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி நகர்மன்ற உறுப்பினராகவும், பின்பு மாமன்ற உறுப்பினராகவும் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
திமுக கூட்டணி சார்பாக 2 முறையும், காங்கிரஸ் கட்சி சார்பாக தனித்து 3 முறையும், மாமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறேன். மேலும், காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். மாநகராட்சி காங்கிரஸ் கட்சி கொரடாவாகவும் இருந்து வருகிறேன்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை என்னால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராகுல் காந்தியின் தவறான வழிகாட்டுதலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறான வழிகாட்டுதலாலும் இந்த முடிவை நான் எடுக்கிறேன்.
எனது மாநகராட்சி கவுன்சிலர் பதவியைத் தவிர எனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று (மே 9) முதல் எனது பதவியில் இருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Summary
Thoothukudi Corporation Congress councillor Chandrabose resigns from party post over support to TVK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கூட்டணி உறுதியானது! விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!

வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ்
தவெகவுடன் காங்கிரஸ் துணைநிற்கிறதா? விஜய்க்கு கடும் கண்டனம்!

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

