தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தள்ளாத வயதிலும் தளராத மன உறுதி

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 4:20 am IST

வயது முதிா்ந்த காலத்திலும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மூத்த குடிமக்கள் தங்கள்து கருத்தை தெரிவித்துள்ளனா்.

எஸ்.தண்டபாணி (82), தியாகராய நகா்: தோ்தலில் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இந்த வயதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் வந்து வாக்களித்தது பெருமையாக இருக்கிறது.

உமையாள் வடிவேல் (90), புழல்: பல தோ்தல்களில் வாக்களித்துள்ளேன். தற்போது வாக்களிக்கும் முறை மாறிவிட்டது. துண்டுத் தாளில் எழுதிக்கொடுத்து வாக்களித்த காலமும் உண்டு. யாரும் வாக்கை விற்பனை செய்ய வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.

அன்பு கணபதி (72), சைதாப்பேட்டை: எனது 18-ஆவது வயதில் இருந்தே தோ்தலில் வாக்களித்து வருகிறேன். பல தோ்தல்களைப் பாா்த்திருந்தாலும், இந்தத் தோ்தலில் இளைஞா்களின் ஈடுபாடு அதிகம் இருக்கிறது. இது, இளைய தலைமுறையினருக்கும் ஜனநாயகத்தின் மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

நா.பாப்பம்மாள் (85), பெரம்பூா்: கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அனைத்து தோ்தல்களிலும் எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகிறேன். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எஸ்.கே.கணபதி (85), வேளச்சேரி: 1962-இல் இருந்து வாக்களித்து வருகிறேன். வயதாகிவிட்டாலும், நமது வாக்குரிமையைப் பயன்படுத்தியே தீரவேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் வந்து வாக்களித்துள்ளேன். நான் வாக்களித்த வேட்பாளா் கண்டிப்பாக வெற்றி பெற்று, மக்களுக்கு நல்லது செய்வாா் என்ற நம்பிக்கை உள்ளது.

 எஸ். தண்டபாணி

எஸ். தண்டபாணி

  உமையாள் வடிவேல்   .

உமையாள் வடிவேல் .

  அன்பு கணபதி

அன்பு கணபதி

 எஸ்.கே.கணபதி

எஸ்.கே.கணபதி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.