துபை சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் பெற்ற குறும்படம் 'பனையேறி'. இந்தக் குறும்படத்தை திசையன்விளையைச் சேர்ந்த சரவணன் மற்றும் கணேஷ் மூர்த்தி ஆகியோர் இணைந்து உருவாக்கி இருந்தனர்.
இந்தக் கூட்டணியின் அடுத்த முயற்சியாக உருவாகி வரும் படம் 'தமிழினி'. இந்தப் படத்தின் கதை மற்றும் வசனத்தை இயக்குநர் கணேஷ் மூர்த்தி மற்றும் தேவா இணைந்து எழுதியுள்ளனர். கணேஷ் மூர்த்தி இப்படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார். ஆசிக், ஷாஷா சிவகுமார், பிரதீப் ராஜ், தீபா சங்கர், பெஞ்சமின், வின்சென்ட் ராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
'பனையேறி' குறும்படத்தின் மூலம் தென் மாவட்ட பனையேறும் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த இந்தப் படக்குழு, 'தமிழினி' திரைப்படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாகப் படமாக்கியுள்ளது. இந்தப் படம் தென்மாவட்ட கடலோரப் பகுதிகளான முட்டம், உவரி, கடியாப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்துக்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சந்தோஷ் பாலாஜி இசையமைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ஒரு மென்மையான காதல் பாடலைப் பாடியுள்ளனர். மேலும் சிவாங்கி, சந்தோஷ் பாலாஜி மற்றும் சம் விஷால் ஆகியோரும் பாடல்கள் பாடியுள்ளனர். வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் கணேஷ் மூர்த்தியே செய்துள்ளார்.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேன்ஸ்-ல் திரையிடப்படும் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படம!

ரக்பி ப்ரீமியா் லீகில் மகளிா் அணிகள் அறிமுகம்

சீனா, ரஷியா இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும்: ஃபரூக் அப்துல்லா
வினைக்கு வித்திடும் "வினை'!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
