சீனா, ரஷியா இணைந்து இந்தப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று வருவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் (என்சி) தலைவர் ஃபரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை (ஏப்.24) தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, “ நான் உங்களுக்க்குச் சொல்கிறேன். மற்றதெல்லாம் கடவுளுக்குத்தான் தெரியும். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி, கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் தமிழகத்தில் மு.க. ஸ்டாலினின் திமுக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்று வருகின்றன. இது கடவுளின் ஆசிர்வாதம்” எனக் கூறினார்.
மேலும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா,
“மத்திய கிழக்கில் அமைதி திரும்பவில்லை என்றால், இந்த உலகிற்கு பெரும் துயரங்கள் ஏற்படும். மேலும், ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு நாடும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
இந்தப் போரில் இஸ்ரேல் தன்னை தள்ளியது சரியல்ல என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உணர்ந்திருப்பார் என நான் நம்புகிறேன். இந்த விவகாரத்தில் டிரம்ப் விரைவாகச் செயல்படுவார் என்றும் சீனா, ரஷியா இணைந்து இந்தப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதை உறுதி செய்யும் எனவும் நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
Summary
Farooq Abdullah has stated that the Trinamool in West Bengal, the Congress in Kerala, and the DMK in Tamil Nadu are emerging victorious.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போரை நிறுத்த 30 நாள்களுக்குள் தீர்வு: அமெரிக்காவை முடிவெடுக்கச் சொல்லும் ஈரான்!

மேற்கு வங்கம், கேரளம், தமிழக பேரவைத் தேர்தல்களில் இவர்கள் வெற்றி பெறுவர்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒமர் அப்துல்லா

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


