தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கடல் கடந்த தமிழ்க் கலாசாரம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த அலகு குத்தும் கலைஞர்கள் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று பக்தர்களுக்கு லாகவமாக அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வழிவகை செய்து வருகின்றனர்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 4:06 am IST

தமிழ்நாட்டைச் சேர்ந்த அலகு குத்தும் கலைஞர்கள் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று பக்தர்களுக்கு லாகவமாக அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வழிவகை செய்து வருகின்றனர். மலேசியாவில் பத்துமலை முருகன் கோயிலில் அண்மையில் நடைபெற்ற விழாவில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் பங்கேற்றனர்.

அந்த விழாவில் பங்கேற்ற வாழப்பாடியைச் சேர்ந்த அலகு குத்தும் கலைஞரான இளைஞர் ரமேஷிடம் பேசியபோது:

'கோயில் திருவிழாக்களில், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய கடவுளுக்கு விரதம், தீ மிதித்தல், அலகு குத்திச் செல்லுதல், அக்னிக் கரகம் எடுத்தல், அங்கப்பிரதட்சிணம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை இன்றளவும் செலுத்திவருகின்றனர்.

தற்போது, விமானத்தில் வருவதைப் போன்றும், ரத தேர்களை முதுகுத் தசையில் அலகு குத்தி இழுத்துச் செல்வதைப் போலவும், விதவிதமான தோற்றங்களில் சென்று சுவாமிகளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதனால் லாகவமாக, மிக நுட்பமாக, விதவிதமாக அலகு குத்தும் கலையைக் கற்ற எங்களுக்குத் தொழில் வாய்ப்புகள் கிடைத்துவருகின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் இடையேயும், இந்தக் கலாசாரம் தொடர்ந்து வருகிறது. இதனால் விழாக் காலங்களில் நாங்கள் அங்கு சென்று, அலகு குத்தி வருகிறோம்.

தற்போது இளைய தலைமுறையினர் விரும்புவதற்கேற்ப நவீன முறையில் அலகு குத்தி, மன மகிழ்ச்சியோடு நேர்த்திக்கடன் செலுத்த உதவுவதை இறைவன் கொடுத்த வாய்ப்பாகக் கருதுகிறோம்.

மலேசியாவில் பத்துமலை முருகன் கோயிலில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்களுக்கு அலகு குத்தியது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துவிட்டது என்கிறார் ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.