ச. நாகராஜன்
விண்வெளியில் 2026 ஜனவரி வரையில்11 ஆயிரம் செயற்கைப் பொருள்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் சாட்லைட்டுகளின் எண்ணிக்கை மட்டும் 6,700. இந்தியா 2025-ஆம் ஆண்டு முடிய தனது பங்குக்கு 136 சாட்லைட்டுகளையும், மற்ற நாடுகள் 400 சாட்லைட்டுகளையும் ஏவியுள்ளன.
ஜேன் ஷிராஜ் என்ற ஐந்து வயது சிறுவன் 195 நாடுகளின் பெயர்களை இரண்டு நிமிடம் 14 விநாடிகளில் கண்ணை மூடிக் கொண்டு கூறுகிறார். இதற்காக இவரது பெயர் இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்ஸில் இடம் பெற்று விட்டது.
பதினாறு வயதான ஓவன் கூப்பர் என்ற சிறுவன் 2026-ஆம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான விருதை கோல்டன் க்ளோப் அவார்ட்ஸின் 83-ஆவது ஆண்டு விழாவில் பெற்றுள்ளார். நெட்ஃப்ளிக்ஸில் அடொலெசென்ஸ் என்ற டி.வி. சீரியலில் புதுமுகமாக நுழைந்து கூப்பர் நிகழ்த்திய சாதனை இது.
பிரபல ஜெர்மானிய விஞ்ஞானியும், கணித மேதையுமான கார்ல் ப்ரெட்ரிக் காஸ் தனது ஏழாவது வயதிலேயே ஓர் அதிசய சாதனையைச் செய்தார். இவர் ஒன்றிலிருந்து நூறு வரை உள்ள எண்களை சில விநாடிகளில் கூட்டி விடையைச் சொல்லி அனைவரையும் வியக்க வைத்தார். 1+100, 2+99 என்று 50 ஜோடி எண்களை மனதில் கூட்டி விடையை 5050 என்று சில நொடிகளில் கூறினார்.
தந்தை, மந்திரங்களைக் கற்றுத் தருபவர், கல்வி கற்றுத் தரும் ஆசிரியர், அன்னம் அளிப்பவர், பயத்தைப் போக்குபவர் ஆகிய ஐந்து பேர் தந்தையாகக் கருதப்பட வேண்டியவர் என்று அறநூல்கள் கூறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப்பொருள் வாங்க பணம் தர மறுத்தவா் மீது தாக்குதல்: சிறுவன் கைது

இன்று மாலையுடன் முடிவுக்கு வரும் தோ்தல் நடைமுறை விதிகள்! 20 ஆயிரம் போ் பணிக்கு முழுமையாக திரும்ப உத்தரவு

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்
தெரியுமா?
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

