விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கதைப்பாடல்: அழகா? ஆற்றலா?

தோகை அழகை வியந்து சொல்லி தானே பெருமை பட்டது - என்

News image
Updated On :21 நவம்பர் 2015, 4:44 pm IST

தோகை அழகை வியந்து சொல்லி

 தானே பெருமை பட்டது - என்

தோகை போல வேறெங்குமில்லை

 என்று செருக்கு கொண்டது!

பறந்து போன கொக்கை அதட்டி

 பக்கம் வரவே சொன்னது - உன்னில்

சிறந்த இறகு எனக்குத் தானே

 என்று சொல்லி  மகிழ்ந்தது!

வண்ண வண்ண வானவில் போல

 வடிவில் கூட  இருந்தது - என்

எண்ணம் போல எல்லா வண்ணம்

 எந்தத் தோகை  கொண்டது!

என்னை விடவும் அழகு இல்லை

 என்றே புகழ்ச்சி கொண்டது - அது

தன்னை அதிகப் படியாய் எண்ணிக்

 கொண்டு ஆட்டம்  போட்டது!

கொக்கே உனக்கு வண்ணம் ஒன்றே!

 அழுக்காய் கூட  கிடக்கிறாய்! - என்று

கொக்கை கோபப் படுத்தி மயிலும்

 மகிழ்ந்து இருப்பதைப் பார்க்கிறாய்!

அழகிய மயிலே அனைத்தும் உண்மை

 ஆனால் என்போல் பறந்திடு - உன்

அழகை கொண்டு தூர மாகப்

 பறக்க முடியா  உணர்ந்திடு!

பதுங்கிய நரியைக் கண்டு இரண்டும்

 பட்டென இறக்கை  அடித்தது - நரி

பதுங்கித் தாவி மயிலைக் கவ்வி

 தோகை பிரித்து உண்டது!

கொக்கின் வேகம் தக்க படியாய்

  இருந்த தாலே  விரைந்தது! - அழகில்

சொக்கி இருந்த மயிலோ நரியின்

 உணவாய் மாறி மறைந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.