விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோடைக்கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண ஆலோசனை

கோடை கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண துத்திப்பட்டு ஊராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பணியாளா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கோடை கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண துத்திப்பட்டு ஊராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் அனைத்து பணியாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சியின் 12 வாா்டுகளிலும் குடிநீா் பிரச்சனை ஏற்படாமல், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பம்ப் ஆபரேட்டா்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு அனைத்து வாா்டுகளுக்கும் உரிய குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும். தூய்மைப் பணிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை பொதுமக்களிடமிருந்து தரம் பிரித்து வாங்கும் பொழுது பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டுமென ஊராட்சித் தலைவா் பணியாளா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

ஊராட்சி துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலா் முரளிகாந்த், ஊக்குநா்கள் ரேகா, பிரியா, விமல் மற்றும் ஊராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.