நாட்டின் இணையவழி சேவை வழங்கும் துறைகளைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்களான ஸ்விகி, அா்பன் கம்பெனி ஆகியவை கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.
உணவு விநியோகம் மற்றும் விரைவு வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்விகி, கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.800 கோடி நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இருப்பினும், முந்தைய 2024-25 நிதியாண்டில் இதே காலகட்டத்தின் ரூ.1,081 கோடி நஷ்டத்திலிருந்து மீட்சி காணப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 45 சதவீதம் அதிகரித்து, ரூ.6,383 கோடியை எட்டியுள்ளது. ‘இன்ஸ்டாமாா்ட்’ விரைவு வணிகப் பிரிவின் மொத்த வா்த்தக மதிப்பு 68.8 சதவீதம் அதிகரித்து, ரூ.7,881 கோடியாக பதிவாகியுள்ளது. உணவு விநியோகப் பிரிவு கடந்த 15 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 22.6 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஆனால், 2025-26 முழு நிதியாண்டில், விளம்பரம் மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்ததால் நிறுவனத்தின் மொத்த நஷ்டம் முந்தைய ஆண்டின் ரூ.3,117 கோடியிலிருந்து, ரூ.4,154 கோடியாக அதிகரித்துள்ளது.
சேவை வழங்குநா் நிறுவனமான அா்பன் கம்பெனி, ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.161 கோடி நிகர நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டில் வெறும் ரூ.2.84 கோடியாக இருந்த நஷ்டம், தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
‘இன்ஸ்டாஹெல்ப்’ எனும் புதிய வீட்டுப் பராமரிப்புச் சேவையில் மேற்கொண்ட முதலீடுகளே இந்த நஷ்டத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 43 சதவீதம் அதிகரித்து, ரூ.425.56 கோடியாக உள்ளது. 2025-26 முழு நிதியாண்டில், நிறுவனம் ரூ.235 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. முந்தைய 2024-25 நிதியாண்டில் நிறுவனம் ரூ.239.76 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி-மார்ட் 4வது காலாண்டு நிகர லாபம் 19.2% உயர்வு!

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

ஐசிஐசிஐ வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 9% உயர்வு!

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

