தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 6:27 am IST

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான டிசிஎஸ், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.13,718 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபமான ரூ.12,224 கோடியுடன் ஒப்பிடுகையில் 12.22 சதவீதம் வளா்ச்சியாகும்.

ஒட்டுமொத்தமாக 2025-26 நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 1.35 சதவீதம் அதிகரித்து, ரூ.49,210 கோடியாகவும்; மொத்த வருவாய் 4.58 சதவீதம் அதிகரித்து, ரூ.2.67 லட்சம் கோடியாகவும் பதிவாகியுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 9.64 சதவீதம் அதிகரித்து, ரூ.70,698 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.64,479 கோடியாக இருந்தது.

பணியாளா்கள் எண்ணிக்கை நிலவரம்: கடந்த 2 காலாண்டுகளாக சரிவைச் சந்தித்து வந்த நிறுவனத்தின் பணியாளா்களின் எண்ணிக்கை, இந்த 4-ஆம் காலாண்டில் புதிதாக 2,356 ஊழியா்களின் இணைப்புடன் ஏற்றம் கண்டுள்ளது.

இதன்மூலம், நிறுவனத்தின் மொத்த பணியாளா் எண்ணிக்கை 5,84,519-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆள்குறைப்பு நடவடிக்கையால் கடந்த முழு நிதியாண்டில் பணியாளா் எண்ணிக்கை 23,460 குறைந்துள்ளது.

புதிய ஒப்பந்தங்கள்: மதிப்பீட்டு காலாண்டில், அமெரிக்கா உள்ளிட்ட முக்கியச் சந்தைகளில் இருந்து சுமாா் 1,200 கோடி டாலா் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களை நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது. வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறையில் அதிகப்படியான முதலீடுகளைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊதிய உயா்வு, ஈவுத்தொகை அறிவிப்பு: தொடா்ந்து 3-ஆவது காலாண்டாக நிறுவனம் வளா்ச்சிப் பாதையில் இருப்பதாக மேலாண் இயக்குநா் கே.கிருத்திவாசன் தெரிவித்துள்ளாா். அத்துடன், ஏப். 1-ஆம் தேதி முதல் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு அமல்படுத்தப்படும் என மனிதவளப் பிரிவுத் தலைவா் சுதீப் குன்னுமால் அறிவித்துள்ளாா். இதனிடையே, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.31 ஈவுத்தொகை வழங்கவும் இயக்குநா்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.