மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோதுமை மாவு பிட்டு

கோதுமை மாவை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து சிவப்பாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

News image

கோதுமை மாவு பிட்டு

Updated On :26 ஏப்ரல் 2026, 3:41 am IST

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு -300 கிராம்

பொடி செய்த வெல்லம்- 200 கிராம்

தேங்காய் -ஒரு மூடி

ஏலக்காய், முந்திரிப் பருப்பு- தலா 10

நெய் -100 கிராம்

செய்முறை :

கோதுமை மாவை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து சிவப்பாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதைச் சூடான தண்ணீர்விட்டுப் பிசறிக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் விடக்கூடாது. பிசறி உள்ள மாவை ரவை சல்லடையில் போட்டுச் சலித்துக்கொள்ள வேண்டும்.

அதை இட்லித்தட்டில் துணியைப் போட்டு அதில் சலித்த மாவைப் போட்டு ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். பின்பு அதை அகலமான தட்டில் போடவேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு பாகு காய்ச்ச வேண்டும். பாகாக வந்தவுடன் கோதுமை மாவை அதில் போட்டு நன்றாகக் கிளறி, அதில் வறுத்த முந்திரிப்பருப்பையும், நெய் விட்டு வறுத்த தேங்காய்ப் பூவையும், ஏலக்காய்ப் பொடியையும், மீதியுள்ள நெய்யையும் நன்றாகச் சூடாக்கி, அதில் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.