தேவையான பொருள்கள்:
பலாப்பழச் சுளைகள் -500 கிராம்
வெல்லம்-200 கிராம்
ஏலக்காய்த் தூள்- 2 தேக்கரண்டி
தேங்காய்- 1
புழுங்கல் அரிசி -100 கிராம்
நெய் -50 கிராம்
பாதாம் பருப்பு , உலர் திராட்சை, ஏலக்காய் -தலா 10
தேங்காய்க் கீற்று -1 மேசைக்கரண்டி
உப்பு -1 சிட்டிகை
செய்முறை:
பலாப்பழத்தில் கொட்டை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். தேங்காயைத் துருவ வேண்டும். பாதாம் பருப்பை இளம் சூடான வெந்நீரில் ஊற வைக்க வேண்டும்.
அரிசியை நீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்தவுடன் கெட்டியாக அரைக்க வேண்டும். ஏலக்காய்த் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இதை சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். தேங்காயை அரைத்து இரண்டு டம்ளர் கெட்டியான பாலும் ஒரு டம்ளர் தண்ணீர் பாலும் தயார் செய்ய வேண்டும்.
அடிகனமான பாத்திரத்தில் பலாச்சுளை, வெல்லம், ஏலக்காய், தண்ணீர், தேங்காய், பால் சேர்த்து அடுப்பில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி, மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதில் அரிசி உருண்டைகளைப் போட்டு கால் மணி நேரம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பாதாம் பருப்பு தோலை நீக்கி விழுதாக அரைக்க வேண்டும். இதை கீரில் சேர்க்க வேண்டும்.
வாணலியில் நெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் தேங்காய்க் கீற்று, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து சேர்க்க வேண்டும். இதில் கெட்டியான பாலை சேர்த்து கொதித்தவுடன் இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெற்றியின் முதல்படி- பள்ளிக் கல்வி!
கோதுமை மாவு பிட்டு

கணினி, ஸ்மார்ட்ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா?
மாம்பழச் சாறு சாதம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
