குக்கரில் பிரியாணி செய்யும்போது மூடியை மூடுவதற்கு முன்பாக சிறிது எண்ணெய் விட்டுக்கிளறி மூடினால் பிரியாணி உதிரியாக வரும் குழைந்து போகாது.
அடைக்கு மாவு அரைக்கும்போது அரிசி, பருப்பு, இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றுடன் வெங்காயத் துண்டுகளையும் சேர்த்து அரைத்து விட்டால் அடை மெலிதாக வருவதுடன் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
சுட்டு வைத்த அப்பளம் நமத்துப் போய் விட்டதா, அந்த அப்பளங்களை நான்காக வெட்டி, எண்ணெய்யில் மீண்டும் பொரித்து விடுங்கள். ருசியாக இருக்கும்.
மோர் மிளகாய் வறுக்க, போகிறீர்களா? தோசை சுட்டு முடித்தப்பின் கல் சூடாக இருக்கும்போதே ஏழெட்டு மோர் மிளகாய்களைப் போட்டு சில சொட்டு எண்ணெய்விட்டு வறுத்தால் அதிகம் கருகாமலும் மொறு மொறுவென்றும் வறுபடும்.
அவலை சுத்தம் செய்து பொடித்து வைத்துக் கொண்டு தோசை வார்க்கும்போது கலந்து ஊற்றினால் சுவையான ஸ்பான்ச் தோசை தயார்.
தேங்காய்த் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்து சமைத்தால் ரசத்தின் ருசி பிரமாதமாக இருக்கும்.,
அவியல் செய்யும்போது தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் இவற்றோடு சிறிது அரிசியை நீரில் ஊற வைத்து சேர்த்து மிக்ஸியில் அரைத்து விட்டால் அவியல் வெள்ளை வெளேரென்றும் கெட்டியாகவும் இருக்கும்.
கலவை சாதம் செய்யும்போது ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். சாதம் பொலபொலவென்று உதிரியாக சுவையாக இருக்கும்.
தோசைக்கு அரைக்கும்போது ஒரு கைப்பிடி கடலைப்பருப்பு,துவரம்பருப்பு, ஒரு தேக்கரண்டி வெந்தயம் ஊற வைத்து அரைத்தால் தோசை மிகவும் டேஸ்டியாக இருக்கும்.
தட்டை செய்யும்போது மைதாமாவு, அரிசி மாவுக்குப் பதிலாக கோதுமை மாவை ஆவியில் வேக வைத்துச் செய்யலாம். தட்டை அதிக ருசியுடன் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி - புகைப்படங்கள்

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் நடனமாடும் பாகுபலி பட நடிகை!
தவெகவுடன் இணைந்ததால் கட்சிப் பதவியை ராஜிநாமா செய்த கவுன்சிலர்!

மூன்று வெவ்வேறு அணிகளுக்காக 1000 ரன்கள்; கே.எல்.ராகுல் தனித்துவமான சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

