தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

நடிகர் ரவி மோகன் வீட்டில் வைர நகை மற்றும் பணம் திருட்டுப்போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

நடிகர் ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைர நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் திருட்டு என காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பிரபல நடிகர் ரவி மோகனின் வீடு உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், ரவி மோகனின் வீட்டில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறையைத் திங்கள்கிழமை இரவு தொடர்புகொண்ட ஒருவர், ரவி மோகன் வீட்டுக்கு வேலைக்குச் சென்ற தனது மனைவியும், மகனும் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த நீலாங்கரை காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். அப்போது ரவி மோகன் வீட்டுக்குள் இரு பெண்களும், ஒரு பெண்ணின் மகனான ஒரு சிறுவன் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ரவி மோகன் உள்பட அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, ரவி மோகன் வீட்டில் சில தங்க நகைகள் திருட்டுப்போனதால் வீட்டில் பணியாற்றும் பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு, விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அப்​போது, அங்கு வந்த காவல் துறையினர் பொது​மக்​கள் யாராக இருந்​தா​லும் தாங்​களாகவே விசா​ரணை நடத்தி ஒரு​வரை வீட்​டில் தடுத்து வைக்​கக்​கூ​டாது என்றும், புகார் இருந்​தால் காவல் நிலையத்​தில் தெரிவிக்க வேண்​டும் என்​றும் அறிவுறுத்தினர்.

இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ரவி மோகன் வீட்டில் ரூ. 3 லட்சம் ரொக்கம், ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைர நகை ஆகியவை திருட்டுப்போயுள்ளதாக சென்னை நீலாங்காரை காவல்நிலையத்தில் ரவி மோகனின் மேலாளர் கோகுல் நேற்று (ஜூன் 23) புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் ரவி மோகன் வீட்டு பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைர நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் திருட்டுப் போனதாகவும், அதனால் அவர் வீட்டில் பணியாற்றும் 2 ஓட்டுநர், உதவியாளர், பணிப்பெண், அவரது மகன் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி சென்னை ரவி மோகன் நேற்று தனது வீட்டில் 2 பணிப்பெண்கள் அவரது மகனை சிறைப்பிடித்து வைத்திருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Summary

A complaint has been lodged with the police regarding the theft of diamond jewelry worth ₹10 lakh and ₹3 lakh in cash from actor Ravi Mohan's house.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.