செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

வீட்டு பணிப்பெண்களைச் சிறைப்பிடித்த ரவி மோகன்?

நடிகர் ரவி மோகன் குறித்து...

News image

ரவி மோகன்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

நடிகர் ரவி மோகன் தன் இல்லத்தில் பணிபுரியும் பெண்களைச் சிறைப்பிடித்து வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பதால் கடந்த ஓராண்டாகவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளார். மனைவியைப் பிரிந்தவர் பாடகி கெனிஷாவுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துகொள்வது; புரமோஷன்களுக்கு வருவது என ஜோடியாக இருந்தனர்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் கெனிஷா, எனக்கு யாரும் வேண்டாம் என ரவி மோகனையும் பிரிந்தார். இதுகுறித்து பேசிய ரவி மோகன், எனக்கு ஆதரவாக இருந்த கெனிஷாவும் சென்றுவிட்டார்; எனக்கு, விரைவாக விவாகரத்து வேண்டும். அதுவரை திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றார்.

இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரவி மோகனின் இல்லத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண்களையும் அதில் ஒருவரின் மகனையும் நேற்றிரவு (ஜூன் 22) ரவி மோகன் சிறைப்பிடித்து வைத்திருந்தாராம். வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாததால் நீலாங்கரை காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும் காவலர்கள் சென்று பார்த்தபோது ரவி மோகன் வீட்டில் அப்பெண்கள் மற்றும் சிறுவன் இருந்தது தெரிய வந்துள்ளது. விசாரித்ததில், வீட்டில் திருடியதால் பொருளை மீட்க பிடித்து வைத்திருப்பதாக ரவி மோகன் தரப்பு கூறியதாம். உடனடியாக, காவல்துறையினர் அப்பெண்களை மீட்டுள்ளனர்.

மேலும், திருடு போனதற்கு சிறைப்பிடிக்கக் கூடாது என்றும் புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்வதாகவும் ரவி மோகனுக்கு காவல்துறை அறிவுரை கூறியுள்ளனராம். ஆனால், தற்போது வரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் தன் வீட்டு பணிப்பெண்களைச் சிறைப்பிடித்து வைத்திருந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Reports have emerged that actor Ravi Mohan held the women working in his home captive.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.