தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!

உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அளிக்கப்படும் அப்ரண்டிஸ் பயிற்சி குறித்து...

News image

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி! - கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் மற்றும் கலை, அறிவியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் பட்டம் பெற்றவர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர்(அப்ரண்டிஸ்) பயிற்சி வழங்கப்படுகிறது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுபற்றிய விபரம் வருமாறு:

பயிற்சியின் பெயர்: Graduate Apprentices (Engineering)

மொத்த காலியிடங்கள்: 400

உதவித்தொகை: மாதம் ரூ.9000

பயிற்சியின் பெயர்: Diploma Apprentices (Engineering)

மொத்த காலியிடங்கள்: 160

உதவித்தொகை : மாதம் ரூ.8000

பயிற்சியின் பெயர்: Graduate Apprentices (Non - Engineering)

மொத்த காலியிடங்கள்: 200

உதவித்தொகை : மாதம் ரூ.9000

தகுதி: அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படும் பாடப்பிரிவுகள் ஏதாவதொரு Graduate Apprentice (Engineering) பயிற்சிக்கு பிஇ, பி.டெக், Diploma Apprentice (Engineering) பயிற்சிக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் . Graduate Apprentice (Non-Engineeing) பிரிவிற்கு ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 2022 ஆம் கல்வியாண்டிற்கு பிறகு படிப்பை முடித்த அவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ, பி.இ, பி.டெக் இதர பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்விற்குஅழைக்கப்படுவர்.

நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுபவர்களின் விபரம் 3.7.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

நேர்முகத்தேர்வு 15.7.2026 முதல் 17.7.2026 வரை நடைபெறும். நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: PWD Office, Chennai.

விண்ணப்பிக்கும் முறை : www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் தங்களுடைய கல்வித் தகுதி மற்றும் இதர விவபடும் ரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் மேற்கண்ட இணையதளத்தால் வழங்கப்படும் Unique Enrolment Number- ஐபயன்படுத்தி, அதே இணையதளம் Public Works Department, TamilNadu என்ற Link-ஐ Click செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.6.2026.

Summary

Apprentice training with a stipend in the Tamil Nadu Public Works Department!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.