.
துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்த்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
வாழைக்காய், உருளைக்கிழங்கு , கத்திரிக்காய் போன்றவற்றில் பஜ்ஜி செய்யப் போகிறீர்களா? காய்களை வில்லைகளாக நறுக்கி ஒருவில்லையின் மேல் ஏதாவது ஊறுகாய் விழுதை தடவிவிட்டு அதன்மேல் இன்னொரு வில்லையை வைத்து மூடி பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.
வடை, பஜ்ஜி, போண்டா, தோசை, அடை போன்றவை மொறு மொறுப்பாக வர வேண்டுமா? ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து, பொடித்து அதை இரண்டு தேக்கரண்டி எடுத்து மாவுடன் கலந்து செய்தால் மொறுமொறுப்பாக வரும்.
மெதுவடைக்கு அரைத்த மாவின் பதம் சரியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அரைத்த மாவைச் சிறிதளவு உருட்டிப் போட்டால் மேலே மிதந்து வரும். இதுவே சரியான பதம்.
குலோப்ஜாமூனுக்கு பாகு செய்து இறக்கும்போது, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கலந்து இறக்கினால் பாகு சீக்கிரம் கெட்டுப் போகாது. கூடுதல் சுவையாக இருக்கும்.
சேமியா உப்புமாவின் சுவையைக் கூட்ட உப்பு சேர்த்து இறக்குவதற்கு முன்னால் அரை மூடி எலுமிச்சைச்சாறு அல்லது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்க்கலாம்.
சேனைக்கிழங்கை வேக வைக்கும்போது சிறிதளவு புளித் தண்ணீர் ஊற்றி வேக வைத்து சமைத்து சாப்பிட்டால் நாக்கு அரிக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சால்மன் மீனின் வாழ்க்கை சுழற்சியும் வலசை பயணமும்!

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

