சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது ஒரு கிண்ணம் புழுங்கலரசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும்போது சாம்பார் குழைவாகவும், கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.
கொத்துமல்லி தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும்போது புளி போடுவதற்குப் பதிலாக ஒரு துண்டு மாங்காய்ப் போட்டு அரைத்தால் துவையலின் சுவையும், மணமும் கூடும்.
தேங்காய் சட்னி அரைக்கும்போது புளிக்குப் பதிலாக சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து அரைத்தால் ருசியாக இருக்கும்.
பக்கோடா செய்ய கடலைமாவுக்கு பதில் கடலைப்பருப்பை பயன்படுத்தலாம். கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் கலந்து பக்கோடா செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
அவியல் செய்யும்போது அதில் விடுவதற்கு தேங்காய் எண்ணெய் இல்லாவிட்டால் தேங்காய் அரைக்கும் போது அதனுடன் கொஞ்சம் முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்தால் சூப்பர் டேஸ்டாக இருக்கும்.
நெய்யைக் காய்ச்சி இறக்கும்போது அரை தேக்கரண்டி வெந்தய்த்தைப் போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.
பழங்களை பிரிட்ஜில் வைக்கும்போது பாலித்தீன் பையினுள் போட்டு வைக்காமல் திறந்த பாத்திரத்தில் போட்டு வைத்தால் நீண்ட நாள்கள் கெடாமலிருக்கும்.
சாம்பார், குழம்பு, ரசம் இவற்றுக்கான மசாலா கலவையில் ஒரு சின்ன வெங்காயத்தையும் சேர்த்துப் பாருங்கள். மணமும் சுவையும் ஊரையே கூட்டும்.
காய்கறிகள் வறுவல் செய்யும்போது எண்ணெய் சூடாகும் சமயத்தில் சிறிது சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் சுவையாக இருக்கும்.
வற்றல் குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் அதில் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்தால் உப்பு குறைந்து சுவை கூடிவிடும்.
கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசி மாவைக் கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்துப் பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். சீக்கிரமாக ஊசியும் போகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி - புகைப்படங்கள்

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் நடனமாடும் பாகுபலி பட நடிகை!
தவெகவுடன் இணைந்ததால் கட்சிப் பதவியை ராஜிநாமா செய்த கவுன்சிலர்!

மூன்று வெவ்வேறு அணிகளுக்காக 1000 ரன்கள்; கே.எல்.ராகுல் தனித்துவமான சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

