கோடைக்காலத்தில் பறவைகளும் அதிசயங்களை நிகழ்த்தும். இந்தப் பருவத்தில்தான் வலசை போகும் வண்ணமயமான பறவைகள் மகரந்தச் சேர்க்கைக்காக செடி, கொடிகளைத் தேடி வரும். இவற்றைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வகையில் கோடையில் தென்படும் பறவைகளை அறியலாம்.
ஊதா சூரியப் பறவைகள்
* 'ஆசிய கோல்' என்ற குயில், பளிச்சிடும் சிவப்பு நிறக் கண்களைக் கொண்டவை. ஆண் குயில்கள் முற்றிலும் கருப்பு நிறத்தில் இருக்கும். பெண் குயில்களோ வெள்ளை நிறப்புள்ளிகள், கோடுகளுடன் கூடிய பழுப்பு நிற இறகுகளைக் கொண்டிருக்கும்.
* 'இந்தியன் பாரடைஸ் ஃப்ளை கேட்சர்' எனும் பறவையோ தனது நேர்த்தியான வெள்ளை வாலுடன் கம்பீரமாகப் பறக்கும். இதனால் அதனை 'இந்தியாவின் சொர்க்கப் பறவை' என்கின்றனர். இனப்பெருக்கத்தின்போது இதன் வால்கள் கண்கவர் நாடா போன்று வளரும். பெண் பறவைகளோ குட்டையான வால்களுடன் செம்பழுப்பு நிறத்தில் காணப்படும். வானில் பறந்தபடியே பூச்சிகளை வேட்டையாடும்.
வெள்ளை தொண்டை மீன் கொத்திகள்
* வெள்ளை தொண்டை மீன் கொத்திகள் பிரகாசமான நீலநிற இறக்கைகள், சாக்லெட் பழுப்பு நிறத் தலை, பளிச்சிடும் சிவப்பு நிற அலகுகளுடன் இருக்கும். இவை நீர்நிலைகள் அருகேயுள்ள பூச்சிகள், தவளைகள், பல்லிகள், சிறு மீன்களைப் பிடித்துச் சாப்பிடும்.
ஆசிய கோல்
* 'ரோஜா வளையக்கிளிகள்' எனும் பிரகாசமான பச்சை நிறக் கிளிகள், கோடையில் காலையிலும், மாலையிலும் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படும்.
* 'இந்திய பீட்டா' எனும் பறவை பலவண்ண இறகுகளைக் கொண்டிருப்பதால், அதை 'நவரங் பறவை' என அழைப்பர்.
மயில்
* ஊதா சூரியப் பறவைகள் கோடையில் பூக்கும் தாவரங்களை சுற்றிக் காணப்படுவதோடு, மகரந்தச் சேர்க்கைக்கும் உதவும்.
ரோஜா வளையக்கிளிகள்
* நாட்டின் தேசியப் பறவையான மயில்கள் பருவமழைக்கு முன்னதாக சுறுசுறுப்பாகக் காணப்படும். ஆண் மயில்கள் தங்களது துணையை கவருவதற்காக பிரகாசமான இறக்கைகளை விரித்துக் காட்டும்.
-ராஜி ராதா, பெங்களூரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிசயப் பறவைகள்!

கன்னி ராசிக்கு உயர்வு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 04)

தூத்துக்குடி உப்பளங்களில் குவிந்த கருந்தலை அரிவாள் மூக்கன் பறவைகள்
இன்றைய ராசி பலன் (31.05.2026) - மீனம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
