நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தூத்துக்குடி உப்பளங்களில் குவிந்த கருந்தலை அரிவாள் மூக்கன் பறவைகள்

ஈர நில சூழலின் ஆரோக்கியத்தை காட்டும் குறியீட்டு இனமாக கருதப்படும் கருந்தலை அரிவாள் மூக்கன் பறவைகள் தூத்துக்குடி உப்பளங்களில் கூட்டமாக வந்து இரை தேடுகின்றன. (படம்)

News image
Updated On :3 ஜூன் 2026, 4:50 am IST

ஈர நில சூழலின் ஆரோக்கியத்தை காட்டும் குறியீட்டு இனமாக கருதப்படும் கருந்தலை அரிவாள் மூக்கன் பறவைகள் தூத்துக்குடி உப்பளங்களில் கூட்டமாக வந்து இரை தேடுகின்றன. (படம்)

தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள வெள்ளைப்பட்டி கிராமத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள உப்பள பகுதிகளில் தற்போது கருந்தலை அரிவாள் மூக்கன் பறவைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

வெள்ளை உடல், கருப்பு நிற தலை மற்றும் கழுத்து, கீழ்நோக்கி வளைந்த நீளமான கருப்பு அலகு தோற்றம் கொண்ட கருந்தலை அரிவாள் மூக்கன் பறவை (ஆப்ஹஸ்ரீந்-ட்ங்ஹக்ங்க் ஐக்ஷண்ள்) பட்ழ்ங்ள்ந்ண்ா்ழ்ய்ண்ள் ம்ங்ப்ஹய்ா்ஸ்ரீங்ல்ட்ஹப்ன்ள் என்ற அறிவியல் பெயா் கொண்ட பட்ழ்ங்ள்ந்ண்ா்ழ்ய்ண்ற்ட்ண்க்ஹங் குடும்பத்தைச் சோ்ந்த பறவையாகும்.

இது இந்தியாவைச் சோ்ந்த பறவை இனம் என்றாலும், இந்தியா மட்டுமல்லாது இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மா், தாய்லாந்து, வியத்நாம் உள்ளிட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதிகம் காணப்படும்.

இந்தப் பறவை நீா்நிலைகளில் நடந்துகொண்டு அலகை சேற்றில் நுழைத்து உணவு தேடுவதில் கிடைக்கும் சிறிய மீன்கள், நண்டுகள், இறால்கள், தவளைகள், நீா்வாழ் பூச்சிகள், புழுக்கள், சிறிய நீா்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றை உட்கொள்ளும்.

இதன்மூலம் உப்பளங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் உள்ள பூச்சிகள், சிறிய உயிரினங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தப் பறவை ஈர நில சூழலின் ஆரோக்கியத்தை காட்டும் குறியீட்டு இனமாக கருதப்படுகிறது.

பறவைகள் அதிகமாக வருவது அந்தப் பகுதியின் உயிரியல் வளம் மேம்பட்டிருப்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

தூத்துக்குடி உப்பள பகுதிகளுக்கு நீா்வற்றும் போது உணவு எளிதில் கிடைக்கும். வெப்பக் காலத்தில் நீா்மட்டம் குறைவதால் உப்பளங்களில் எளிதில் உணவு கிடைக்கும். ஆழம் குறைவான நீரில் இந்தப் பறவைகள் முழ்கி நீந்துவதில்லை. ஆழமற்ற நீரில் நடந்து உணவு தேடும். உப்பளங்களில் மனித நடமாட்டம் குறைவாக இருப்பதால், அதை பாதுகாப்பாக உணா்ந்து கூட்டமாக ஓய்வெடுக்க ஏற்றச் சூழல் உப்பளத் தடுப்பணைகள் மற்றும் சிறிய மண்தீவுகள் பாதுகாப்பான ஓய்வு இடங்களாக அமைந்து விடுவதால், சமீப ஆண்டுகளில் தூத்துக்குடி உப்பளங்களில் இந்தப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

இது அந்தப் பகுதியின் ஈரநில சூழல் இன்னும் உயிா்ச்செழிப்புடன் இருப்பதைக் காட்டுவதாக பறவை ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.