லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வழிகாட்டும் கள்ளக்குறிச்சி!

அண்மைக்காலங்களில் பெண்கள் பொது வாழ்வில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

Published On :14 ஜூன் 2026, 4:15 am IST

அண்மைக்காலங்களில் பெண்கள் பொது வாழ்வில் அதிகமாகக் காணப்படுகின்றனர். அரசு அலுவலர்களாக, விளையாட்டு வீரர்களாக, அரசியலில், பன்னாட்டு நிறுவனங்களில் பல துறைகளில் இன்றைக்கு பெண்கள் சாதிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது உயர்பதவியில் பெண்கள் பணியாற்றி பெருமை சேர்க்கின்றனர்.

இன்று பணிபுரியும் இடங்களில் நால்வரில் ஒருவர் பெண். ஆரம்ப சுகாதாரப் பணிகளில் வேலை செய்பவர்களில் 4 பேரில் 3 பேர் பெண்கள். மருத்துவ ஆய்வு, வங்கித் துறை, தகவல் தொழில்நுட்பம், பட்டயக் கணக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள்... இப்படி பெண்களின் சாதனைகளை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

உயர்பதவியில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் நிலை இப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உருவாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.ஷிஹ்னாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜீவா, மகளிர்த் திட்ட இயக்குநர் அ.லலிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர் கா.கார்த்திகா என ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் தற்போது உயர்பதவியில் உள்ளனர்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய நிர்வாகத் துறைகளில் பெண்கள் தங்களது திறமை, கல்வி, அர்ப்பணிப்பு, தலைமைத்துவத்தால் உயர்ந்த இடங்களை அடைந்து மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுவது ஒரு சமூகப் புரட்சியின் வெளிப்பாடாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.