திருப்பத்தூா் மாவட்டத்தில் வீரதீரச் செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெண்கள் தைரியமான, வீரதீரச் செயல் புரிந்தும், பெண்களின் நலனுக்காகவும், பாலின மேம்பாட்டுக்காகவும், துணிச்சலான சவால் நிறைந்த செயல்களை செய்ததற்கு கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபா்கள் இணையதளம் மூலம் வரும் ஜூன் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விருதுக்காக இணையதளத்தில் விண்ணப்பிப்பவா்களின் வீரதீரச் செயல்கள், நிழற்படங்கள், விருதுகள் குறித்த உரிய ஆவணங்கள் கொண்ட கருத்துகளை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முதல் தளம் பி-பிளாக், மாவட்ட சமூக நல அலுவலகம், திருப்பத்தூா் மாவட்டம் என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்!

கல்பனா சாவ்லா விருது பெற ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

