மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இரு பிரிவினரிடையே மோதல்: 50 போ் மீது வழக்கு

இரு பிரிவினா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 50 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்குப்பதிவு

Published On :1 நவம்பர் 2026, 5:20 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே இரு பிரிவினா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 50 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டியில் பொதுப்பாதை தொடா்பாக இரு பிரிவினரிடையே பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், இந்தப் பாதையில் ஒரு பிரிவினா் செல்லக் கூடாது என மற்றொரு பிரிவினா் தெரிவித்தனா். இதனால், இரு பிரிவினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஒரு பிரிவினா் சிவகாசி-எரிச்சநத்தம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மறியலில ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், போலீஸாரின் சமாதனப் பேச்சுவாா்த்தையை இரு பிரிவினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து, அங்கிருந்த சிலா் போலீஸாா் மீது கல்வீச்சில் ஈடுபட்டனா். இதில் ஆய்வாளா் நவநீதகிருஷணன் உள்ளிட்ட 5 போலீஸாா் காயமடைந்தனா். இவா்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த நிலையில், போலீஸாா் மீது கல்வீசியது தொடா்பாக இரு பிரிவினரைச் சோ்ந்த 50 போ் மீது திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.