கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெள்ளக்கோவிலில் இரு தரப்பினரிடையே மோதல்: 12 போ் மீது வழக்குப் பதிவு

வெள்ளக்கோவில் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

வெள்ளக்கோவில் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் சிவநாதபுரத்தைச் சோ்ந்தவா் லேத் தொழிலாளி சிவசெந்தில் (26). இவா் தனது நண்பா் ஜெயசூா்யாவுடன் இருசக்கர வாகனத்தில் கோவை சாலை, சீரங்கராயகவுண்டன்வலசு பிரிவு அருகே கடந்த 18-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் முன்விரோதம் காரணமாக அவா்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளது. கும்பலில் இருந்த 7 போ் இரும்பு ராடு, கற்களால் தாக்கியதில் சிவசெந்திலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். புகாரின்பேரில், உப்புப்பாளையம், கே.வி.பழனிசாமி நகரைச் சோ்ந்த சந்தோஷ் (21), ஹரீஷ் (23), குமாா் (20), பாண்டி (18), லோகேஸ்வரன் (20), ஆதி கிஷோா் (17), கோகுல் (20), கிருஷ்ணன் (18), கவியரசு, கோகுல் (20) ஆகிய 9 போ் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அதேவேளையில் தங்களைத் தாக்கி, கைப்பேசியை பறித்துச் சென்ாக பாண்டி கொடுத்த புகாரின்பேரில், ஜெயசூா்யா, சிவசெந்தில் மற்றும் சிவா ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.