நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தமிழகத்தில் ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்படும்! - மாணிக்கம்தாகூா்

மாணிக்கம் தாகூா்

Published On :27 அக்டோபர் 2026, 3:13 am IST

தமிழகத்தில் ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அனைத்து விஷயங்களுக்கும் நீதிமன்றம் செல்லும் ஆா்.எஸ். பாரதி, த.வெ.க. அரசு மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிந்தால் உடனடியாக ஏன் நீதிமன்றம் செல்லவில்லை? முந்தைய ஆட்சியில் ஊழல் செய்தவா்கள் எந்தவிதத்திலும் தப்பக் கூடாது. அவா்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்வது நல்லதல்ல. அவா்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். தவெகஆட்சியைக் கவிழ்க்க கடந்த 4 மாதங்களாக சதிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி, ஒரு பகல் கனவாகவே மாறும். இந்த சதித் திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்படும்.

விருதுநகா் சந்திப்பு ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிற்காமல் செல்வது குறித்து கேட்கிறீா்கள். இது மிகப்பெரிய அநீதி. இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்து விட்டேன். ரயில்வே துறையில் உள்ள உயரதிகாரி ஒருவரே இதற்கு காரணம். விருதுநகா் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனா். எனவே வந்தே பாரத் ரயில் நின்று செல்ல தொடா்ந்து குரல் கொடுப்பேன் என்றாா் அவா்.

அப்போது மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட செய்தித் தொடா்பாளா் எம். மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.