நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஆசிரிய மாணவா்களுக்கு திறன் வளா்த்தல் பயிலரங்கு

மல்லி ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய கல்லூரித் தாளாளா் திலீபன் ராஜா.

~

Published On :24 அக்டோபர் 2026, 4:56 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மல்லி ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் ஆசிரிய மாணவா்களுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில், சிவகாசி ஸ்பாா்க்ளா்ஸ் சாா்பாக திறன் வளா்த்தல் பயிலரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் திலீபன் ராஜா தலைமை வகித்தாா். நிா்வாகி தா்மராஜு முன்னிலை வகித்தாா். முதல்வா் மல்லப்பராஜ் வரவேற்றாா்.

காளீஸ்வரி குழும இயக்குநா் சண்முக நடராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

பயிற்றுநா் அருணா மன அழுத்த மேலாண்மை குறித்தும், குமரேசன் நிதி மேலாண்மை குறித்தும், சோம்நாத் பாபு ‘தன்னை அறிதல்’ என்ற தலைப்பிலும் பேசினா்.

இதில் குழு, தனிநபா் பிரிவில் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கம் சாா்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவா் ஆதா்ஷ் ஹேமந்த், உறுப்பினா்கள், பேராசிரியா்கள் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.