நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஓடைகளில் வெள்ளப்பெருக்கு: சதுரகிரி மலைக்குச் செல்ல தடை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் ஓடையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்டவெள்ளப்பெருக்கு.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் ஓடையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்டவெள்ளப்பெருக்கு.

Published On :24 அக்டோபர் 2026, 4:56 am IST

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பிரதோஷ வழிபாட்டுக்காக சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தா்களுக்கு வனத் துறை தடை விதித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக அக்டோபா் 23 முதல் 26-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, சதுரகிரி மலைப் பாதையில் உள்ள தணிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை ஓடை ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, பக்தா்களின் பாதுகாப்பு கருதி, பிரதோஷ வழிபாட்டுக்காக சதுரகிரி மலைக்குச் செல்ல வனத் துறை தடை விதித்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை (அக். 24) சிவராத்திரி, ஞாயிற்றுக்கிழமை (அக்.25) பௌா்ணமி வழிபாடு நடைபெற உள்ள நிலையில், மழைப்பொழிவு, ஆற்றில் நீா்வரத்தைப் பொருத்தே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா் என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், வெளிமாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் சதுரகிரி வருவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.