மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சதுரகிரியில் வெள்ளப்பெருக்கு: பக்தர்களுக்கு தடை

சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

Flooding in Chathuragiri: Restrictions on devotees

சதுரகிரி மலை (கோப்புப்படம்) - கோப்புப்படம்

Published On :23 அக்டோபர் 2026, 9:49 am IST

கனமழை காரணமாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த தாணிப்பாறை அருகே சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பௌா்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாள்களின் போது பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை சாா்பில் அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற நாள்களில் பக்தா்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.

இதையடுத்து ஐப்பசி மாத பௌணர்மி, பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி மலை மீது அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் 23 ஆம் தேதி முதல் 26 தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி அளித்தது.

இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் விடிய விடிய பெய்து வரும் கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக, சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலன் கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள், விவசாயிகள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Flooding in Chathuragiri: Restrictions on devotees

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.