நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கொல்லிமலை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

கொல்லிமலையில் பெய்யும் தொடா் மழையால் ஆகாய கங்கை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் வியாழக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Published On :24 அக்டோபர் 2026, 5:00 am IST

கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை தடைவிதித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இங்குள்ள ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவியில் குளித்து மகிழ்வதற்காக பல்வேறு மாநில, மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வருவா். கடந்த சில நாள்களாக கொல்லிமலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் கனமழை பெய்கிறது.

ஆகாய கங்கை அருவியில் குளிப்பதற்கு புதன்கிழமை வனத்துறை அனுமதி அளித்த நிலையில், வியாழக்கிழமை பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் ஆகாய கங்கை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடைவிதித்துள்ளது.

வரும் நாள்களில் மழையின் தாக்கம், வெள்ளப்பெருக்கு குறையும்பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம்போல அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவா் என கொல்லிமலை வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.