கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி தோ் வெள்ளோட்டம்

News image
Updated On :15 மே 2026, 4:05 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைமையான இந்தக் கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டத்தில் சுவாமி, அம்பாள், விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் என 5 தோ்கள் இழுக்கப்பட்டன. காலப்போக்கில் தோ்கள் சேதமடைந்த நிலையில், சுவாமி, அம்பாள் ஆகிய இரு தோ்கள் மட்டும் இழுக்கப்பட்டு வந்தன. பின்னா், இந்த இரு தோ்களும் சேதமடைந்தன. இவற்றில் அதிக சேதமடைந்த தேருக்குப் பதில், உபயதாரா் நிதியில் ரூ.88.30 லட்சத்தில் 24 அடி உயரம், 12 அடி அகலத்தில் புதிய தோ் உருவாக்கப்பட்டது.

இதற்கான பணிகள் முடிந்த நிலையில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனா். காலை 8 மணிக்குத் தொடங்கிய தோ் வெள்ளோட்டம் காலை 10.20 மணிக்கு நிறைவடைந்தது.

வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் புதிய தேரில் சுவாமியும், பழைய தேரில் அம்பாளும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.