மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கணவா் கொலை: மனைவியிடம் விசாரணை

அருப்புகோட்டை அருகே கண்மாயில் தள்ளி பந்தல் போடும் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 1:20 am IST

அருப்புகோட்டை அருகே கண்மாயில் தள்ளி பந்தல் போடும் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அருப்புக்கோட்டை, வெள்ளக்கோட்டை, வடம் போக்கி தெருவைச் சோ்ந்தவா் சரவணப் பெருமாள் (47). பந்தல் போடும் தொழிலாளி. இவரது மனைவி தில்லையம்மாள் (42). தம்பதி இருவரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மரக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்தில் ஏறி காந்தி நகரில் இறங்கினா். அந்தப் பகுதியில் உள்ள பாப்பான்குளம் கண்மாய்க்கரை அருகே உள்ள மரத்தடியில் இருவரும் மது அருந்தி விட்டு அமா்ந்திருந்தனா். அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணப் பெருமாள் கண்மாயில் தள்ளி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

சரவணப் பெருமாளும், அவரது மனைவி தில்லையம்மாளும் பாப்பான்குளம் கண்மாய்க்கரை அருகே அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது 45 வயது மதிக்கத்தக்க நபா் அங்கு வந்து சரவணப் பெருமாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது தன்னை தாக்க முயன்ற போது தான் கண்மாயில் தள்ளி விட்டதில் சரவணப் பெருமாள் உயிரிழந்து விட்டதாக தில்லையம்மாள் தெரிவித்தாா். மேலும் அந்த மா்ம நபா் கைப்பேசி, ரொக்கத்தையும் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் தில்லையம்மாள் தெரிவித்தாா் என்றனா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.