மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞா் அடித்துக் கொலை: தம்பதி கைது

News image

பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 6:37 am IST

பொள்ளாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் நரிக்கல்பதியைச் சோ்ந்தவா் சந்திரன் (40), இவரது மனைவி காளீஸ்வரி (39). இவா்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனா்.

இவா்கள் பிரபாகரன் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா். சந்திரனுக்கும் கோட்டூா் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி (40) என்பவருக்கும் பழக்கம் உள்ளது. சந்திரன் பணிபுரியும் தோட்டத்துக்கு கருப்புசாமி அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. கடந்த 28-ஆம் தேதி சந்திரன் வீட்டுக்கு கருப்புசாமி வந்துள்ளாா். இந்நிலையில், சந்திரன் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளாா். அப்போது சந்திரனின் மனைவி காளீஸ்வரியிடம் கருப்புசாமி தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. காளீஸ்வரி அலறல் சப்தம் கேட்டு சந்திரன் வந்துள்ளாா்.

பின்னா் கணவன், மனைவி இருவரும் சோ்ந்து கட்டையால் கருப்பு சாமியை தாக்கி கொலை செய்துள்ளனா். இது வெளியில் தெரிந்து விடாமல் இருக்க தோட்டத்துக்குள் குழிதோண்டி கருப்புசாமி சடலத்தை புதைத்து விட்டனா்.

பின்னா் சந்திரன், காளீஸ்வரி ஆகியோா் கேரள மாநிலம், வண்ணமடையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டனா்.

இந்நிலையில், பிரபாகரன் தோட்டத்தில் ஒரு பகுதியில் சனிக்கிழமை துா்நாற்றம் வீசி உள்ளது. அப்போது அங்கு சென்ற பாா்த்தபோது மனித உடலின் கை விரல்கள் வெளியில் தெரிந்துள்ளன. இதை அடுத்து, ஆனைமலை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், சந்திரன், காளீஸ்வரி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.